ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்று எல்லோரும் வாய்ப் பேச்சாக சொல்லிக் கொள்வோம். அது என்ன என்ன கலைகள் என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொள்வோர் அதிகம். ‘ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’ என்று பாடுகின்றோம். அந்த 64 கலைகளிலும் வல்லவர் நாமென்று பெருமை அடித்துக் கொள்ள முடியாவிட்டாலும்கூட அவை என்னென்ன என்பதையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?
இதோ அந்த 64 கலைகள்
1. இலக்கணம்
2. எண் பயிற்சி
3. சமய நெறி
4. நீதி அறிவுத்திறன்
5. கையெழுத்துப் பயிற்சி
6. எழுத்துக் கூட்டுப் பயிற்சி
7. சமய வரலாறு
8. சோதிடத் திறன்
9. சட்டத் திறன்
10. யோகப் பயிற்சி
11. வேதத்தின் நடைமுறைப் பயிற்சி
12. சகுனம் நிமித்தல் அறிதல்
13. சிலை அமைக்கும் பயிற்சி
14. மருந்துகள், நோய்கள் பற்றிய
பயிற்சி
15. உருவத்தால் அறிதல்
(சாமுத்திரிக்கா லட்சணம்)
16. சரித்திர அறிவு
17. கவி புனையும் அறிவு
18. அலங்கரிக்கும் பயிற்சி
19. மொழித் தேர்ச்சி
20. நாடகப் பயிற்சி
21. நடனப் பயிற்சி
22. வீணைப் பயிற்சி
23. சப்தத்தைக் கொண்டு அறிதல்
24. மிருதங்கப் பயிற்சி
25. புல்லாங்குழல் பயிற்சி
26. எறியும் பயிற்சி
27. கால நிர்ணயப் பயிற்சி
28. தங்கத்தை சோதிக்கும் அறிவு
29. தேர் ஓட்டும் பயிற்சி
30. யானை ஏற்றம்
31. குதிரை ஏற்றம்
32. ரத்தினக் கல்சோதிக்கும் திறன்
33. மண்ணைச் சோதிக்கும் திறன்
34. மல்யுத்தப் பயிற்சி
35. படைகளை வழிநடத்தும் திறன்
36. கவர்ச்சிக் கலை
37. பேய்களை ஏவுதல்
38. வித்தையின் மூலம் அதிர்ச்சி
உண்டாக்குதல்
39. காதல் கலை
40. மயங்கச் செய்யும் கலை
41. மற்றவரை வசீகரிக்கும் கலை
42. ஒருபொருளை இன்னொரு பொருளாக மாற்றுதல்.
43. குழு வாத்தியப் பயிற்சி
44. தாதுப் பயிற்சி
45. மிருகம், பறவை,
ஊர்வனவற்றை வசீகரித்தல்
46. துக்கமுள்ள மனதைத் தேற்றும் பயிற்சி
47. விசத்தை முறிக்கும் பயிற்சி
48. நஷ்டத்தை அறியும் திறன்
49. கைரேகை சாஸ்திரம்
50. ஆகாயத்தில் மறைதல்
51. ஆகாயத்தில் நடத்தல்
52. மறு உடம்பில் பிரவேசித்தல்
53. தானே மறைதல்
54. அதிசயமானவற்றை
வரவழைத்தல்
55. ஆகாயத்திலும், பூமியிலும்,
அதிசயம் செய்தல்
56. நெருப்பில் நடத்தல்
57. நீரில் நடத்தல்
58. காற்றில் நடத்தல்
59. கண் பயிற்சி
60. வாய்ப் பயிற்சி
61. இந்திரியக் கட்டு
62. மறைந்தவற்றைக் காணுதல்
63. யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்
64. ஆத்மாவை இயக்குதல்
No comments:
Post a Comment