ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபானம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் காலை பஸ் ஸ்டாண்ட்
அருகே டாஸ்மாக்கில் மது குடித்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.
வகுப்பிற்கு வந்த ஆசிரியை, மாணவர்கள் மது அருந்தி விட்டு வந்தது குறித்து
புகார் கூறினார். உதவி தலைமை ஆசிரியர் முத்துராஜ், ஆசிரியர் பெஞ்சமின்
ஆகியோர் அதுகுறித்து அவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்கள் மூவரும் சேர்ந்து ஆசிரியர்களை தகாத
வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்களை ஆசிரியர்கள்
அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து அதன் மூலம் அவர்கள்
குடிபோதையில் இருந்ததை உறுதி செய்தனர். பள்ளி தாளாளர் எட்வின் கனகராஜ்
போலீசில் புகார் செய்து ரசீது பெற்றார்.
இதுகுறித்து பெற்றோரை அழைத்து நாங்களே பேசி தீர்த்து
கொள்கிறோம் என கூறி சென்றுள்ளனர். மாணவர்கள் குடிபோதையில் பள்ளி
வளாகத்திலேயே தகராறில் ஈடுபட்டது ஆசிரியர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment