எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வை ஒரே சமயத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது.
10-வது , பிளஸ்-2 தேர்வுகள்:
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர் வேலைக்கு சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக உயர்கல்வி படிக்க பிளஸ்-2 தேர்வும் அதில் உள்ள மதிப்பெண்ணும் அவசியம்.
எனவே எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 தேர்வை முக்கியத்தேர்வுகளாக கருதி தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த
தேர்வுகளில் குறிப்பாக பள்ளிக்கூடத்தில் படித்து பெயிலானவர்கள் அல்லது
தனியாக தேர்வு எழுதுவோர் தனித்தேர்வர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படிபட்ட
தனித்தேர்வர்களில் சிலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். அதை
தடுக்க அரசு தேர்வுத்துறை தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் தேர்வரின்
புகைப்படத்தை ஸ்கேன் செய்து கொடுத்தது. இதனால் ஆள்மாறாட்டம் குறைந்தது.
இந்த
வருடம் அதை விட புதிதாக விடைத்தாள் மதிப்பீட்டில் எந்த சிபாரிசும்
இருக்கக்கூடாது எந்த விடைத்தாள் எங்கு திருத்தப்படுகிறது என்று தெரியாமல்
இருக்க டம்மி நம்பர் வழங்கப்பட்டது.
ரகசிய கோடு
இப்போது அதைவிட புதிய தொழில்நுட்பமாக விடைத்தாளில் ரகசிய கோடு (பார்கோடு) கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த
ரகசிய கோடை தேர்வுத்துறை அல்லாமல் யாரும் கண்டுபிடிக்க முடியாது. இந்த
புதிய முறை நடந்து முடிந்த அக்டோபர் மாத தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டு
வெற்றியும் காணப்பட்டது.
அதே
ரகசிய கோடு முறையை நடைபெற உள்ள மார்ச் மாத பொதுத்தேர்வுகளான
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் அறிமுகப்படுத்த
பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.
சேர்த்து நடத்த திட்டம்
அதுபோல நடந்து முடிந்த அக்டோபர் மாத எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வை சேர்ந்தார்போல நடத்தியது.
அதுபோல மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 தேர்வை ஒரே சமயத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக
பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1 அல்லது 2-ந்தேதிகளில் தொடங்கும்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு அதன் பிறகு 10 நாட்கள் கழித்துதான் தொடங்கும்.
அப்படி அல்லாமல் சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நடத்தினால் நடைமுறைக்கு சரியாக வருமா என்று ஆலோசித்து இறுதி முடிவு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் எடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment