scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 20, 2013

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு இன்று-20/10/13 நாமக்கல் நகரில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த போராட்டம் குறித்து முக்கிய முடிவு

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு இன்று-20/10/13 நாமக்கல் நகரில் நடைபெற்றது.

பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையாக உள்ள தர ஊதியம் 4200 ஆக மாற்ற கீழ்க்கண்டநடவடிக்கைகளில் செய்வது என முடிவாற்றப்பட்டது
முதலில்

.அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து

1.இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 என மாற்றம் செய்து,ஊதியக்கட்டு 1லிருந்து 2க்கு மாற்றம் செய்யக்கோருவது

2.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்

ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகள் குறித்து கோரிக்கை வைப்பது.

அதற்க்குப்பிறகும் அதவது

முதல்வரை சந்தித்து முறையிட்ட பிறகும்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உடனடியாக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டகளத்தில் குதிப்பது என முடிவாற்றப்பட்டது.
மேலும்

முக்கிய நிகழ்வாக

பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C,அவர்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மூத்த தலைவரான திரு.ஈஸ்வரன் அவர்களுடனும்

தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலர் திரு மணிவாசகம் அவர்களுடனும்

தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்
.
அவர்களும் இம்முடிவு குறித்து மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தனர்.

தற்போது
இதனைத்தொடர்ந்து முழு வீச்சில் மற்ற சங்கங்களின் மாநில தலைமைகளுடன் இது குறித்து பேசுவதற்கான முயற்சிகள் பொதுச்செயலர் திருமிகு முத்துசாமி அவர்களால் நடைபெற்று வருகின்றன
தகவல்
திரு.க.செல்வராஜ்
.மாநில துணைச்செயலர்
.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
.நாமக்கல்

No comments:

Post a Comment