scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 10, 2013

கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "நோட்ஸ்' வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை, சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக, அரசுக்கு தகவல் சென்றது.
இலவச "நோட்ஸ்':
இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை மூலம், அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்'கள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"
" கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்' வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் பட்டியலை, முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கிறோம். மாணவர்கள் பட்டியல் சென்றபின், அரசு உடனே, இலவச "நோட்ஸ்களை' வழங்கும். அரசு தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் விதத்தில், நவம்பர் 15க்குள் நோட்ஸ்கள் வழங்கப்படும்,'' என்றார்

No comments:

Post a Comment