மாணவர்களிடத்தில் அன்பு, ஆதரவு, உதவும் மனப்பான்மை, சேவைமனப்பான்மை ஆகிய நற்பண்புகளை வளர்க்க அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஒருவாரம் மகிழ்ச்சி தரும் வாரமாக கொண்டாடுங்கள்.
மாணவர்கள் தங்களின் மனதை கவர்ந்த ஆசிரியர்களின் பணியினை பாராட்டி நன்றி பெருக்கோடு சிறு கட்டுரை வரையலாம்.
இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு இயன்ற பரிசுப்பொருட்களை மாணவர்கள் கொடுத்து உதவலாம். எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுக்கலாம். பயன்தரும் செய்திகளை, படிக்கத்தெரியாதவர்களுக்கு படித்து காட்டிடலாம்.
மாணவர்கள் தனது சுய முயற்சியில் ஏதாவது ஒரு கைவினை பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கிட செய்யலாம்.
போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யலாம்.
பாலிதீன் பைகள்
பாலிதீன் பைகளின் தீமை பற்றி எடுத்துரைத்து, பாலிதீன் பைகளை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக பழைய காகிதப்பைகளை பயன்படுத்தலாம்.
பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவி செய்யலாம்.
முதியவர்களுக்கு பத்திரிகை வாசித்து காட்டலாம்.
இப்படிப்பட்ட செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
No comments:
Post a Comment