அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை
நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக
விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன்,
ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என,
தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 1,000த்திற்கும் மேற்பட்டோர், ஆட்சேபனை
தெரிவித்து விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, பாட வாரியான நிபுணர்
குழு, முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது
. இதைத் தொடர்ந்து, அந்த முடிவுகளுக்கு டி.ஆர்.பி., போர்டு ஒப்புதல் அளித்ததும், இந்த வார இறுதிக்குள், இறுதி விடைகள் வெளியிடப்படும் எனவும், அடுத்த வாரத்தில், தேர்வு செய்யப்பட்ட, 2,881 பேரின் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்படும் புதிய ஆசிரியர், இம்மாத இறுதிக்குள்ளாகவே பணி நியமனம் செய்யப்படுவர். வட மாவட்டங்களில், அதிகளவு, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைவரும், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர்.

No comments:
Post a Comment