நகராட்சிகளில் தொழில்வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு
அனுமதி அளித்துள்ளது. நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரிசீராய்வு
மேற்கொள்ளப் படும். கடந்த, 2008 ஏப்., 1 க்கு பிறகு, 2013 ஏப்., 1ல் வரி
மறு சீராய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தலை மனதில்
கொண்டு, தமிழக அரசு வரி மறு சீராய்வை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், நகராட்சிகளின் நிதி நிலை மோசமாக உள்ளதால், வரியை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தினால், அது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும். எனவே, வர்த்தகர்களை மட்டுமே பாதிக்கும், தொழில் வரியை 5 சதவீதம் உயர்த்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வரியினங்களையும் உயர்த்தினால் தான், நகராட்சிகளில் நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால், அரசை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்,என நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment