திருப்பூர்:பள்ளி கல்வித்துறை
சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா
மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, போட்டியை துவக்கி வைத்தார். திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய ஆறு குறு மையங்களுக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 276 மாணவ, மாணவியர் விளையாடினர். வயது அடிப்படையில், 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக, போட்டி நடத்தப்பட்டது.
மாணவியருக்கான போட்டி
11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி மாணவி
விஸ்ருதா முதலிடம்; வெள்ளக்கோவில் தென்கரைபாளையம் அரசு பள்ளி தாரணி இரண்டாமிடம்; மங்கலம் அமிர்தா
வித்யாலயா பள்ளி ஜனனி மூன்றாமிடம்.
14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், உடுமலை ஸ்ரீனிவாசா மெட்ரிக் பள்ளி கார்த்திகா முதலிடம்; திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி சோனா பிரீத்தி இரண்டாமிடம்; பாரதி கிட்ஸ் பள்ளி சிவானி மூன்றாமிடம்.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சுப்பையா மெட்ரிக் பள்ளி மாணவி காயத்ரி முதலிடம்; முத்தூர் அரசு பள்ளி மகாதேவி இரண்டாமிடம்; பாரதி கிட்ஸ் தக்ஷன்யா மூன்றாமிடம்.
19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி பிரியதர்ஷினி முதலிடம்; வித்ய விகாசினி பள்ளி நவீனாரெட்டி இரண்டாமிடம்; அவிநாசி செயின்ட் தாமஸ் பெண்கள் பள்ளி சுபாஷினி மூன்றாமிடம்.
மாணவர்களுக்கான போட்டி
11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், உடுமலை ஸ்ரீனிவாசா பள்ளி மாணவன் ராகவேந்திரன் முதலிடம்; வேட்டுவ
பாளையம் அமிர்தா வித்யாலயா பள்ளி பிரியன் இரண்டாமிடம்; சுண்டக்காம்
பாளையம் அரசு பள்ளி தினேஷ்
மூன்றாமிடம்.
14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், பாரதி கிட்ஸ் சேத்ராலயா பள்ளி நவநீதன் முதலிடம்; பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளி சர்வேஸ்வரன் இரண்டாமிடம்; கிட்ஸ் கிளப் பள்ளி லோகேஷ்
மூன்றாமிடம்.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், வெள்ளக்கோவில் ஏ.என்.வி., வித்யாலயா பள்ளி விஷ்ணு முதலிடம்; இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி வைஷ்ணவ் இரண்டாமிடம்; வீரபாண்டி பாரதி மெட்ரிக் பள்ளி கோபிகிருஷ்ணா மூன்றாமிடம்.
19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி கங்காதரன் முதலிடம்; இடுவம்பாளையம் அரசு பள்ளி கவுதமன் இரண்டாமிடம்; நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வினித் மூன்றாமிடம்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான
பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட செஸ் கழக செயலாளர் நித்யானந்தம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சிவசண்முகம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர் 24 பேரும், வரும் அக்.,
19ல் நடக்கும் ஈரோடு மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி
பெற்றுள்ளனர்.
ஊத்துக்குளி ஒன்றியத்துக்கும், தங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்த உங்கள் மாணவனுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
ReplyDelete