மாதாந்திர கட்டணத்தில், மூன்றில் ஒரு பங்கு சலுகை கட்டணத்துடன், புறநகர்
பஸ்களில், நாளை (16ம் தேதி) முதல், பயணிகள் பயணிக்க உள்ளனர். அரசு
போக்குவரத்து கழக பஸ்களில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின்
மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வசதி உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் படிப்பவருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. தனியார்
கல்லூரி மாணவர்களுக்கு, 50 சதவீதம் சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இவை தவிர்த்து, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என
அனைவரும், ஒரு மாத கட்டணத்தில், மூன்றில் ஒரு பங்கு, சலுகை கட்டணத்தில் நகர
பஸ்களில் பயணிக்க, மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இச்சலுகை கட்டணத்தை, புறநகர் பஸ்களிலும் வழங்க வேண்டும் என, கிராமப்புற மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர், கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, "அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் புறநகர் பஸ்களில், சலுகை கட்டணத்துடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப்படும்' என, அரசு அறிவித்து இருந்தது. சேலம், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட போக்குவரத்து கழக பணிமனைகளில், இம்மாதம், 1ம் தேதி முதல், சீசன் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை 16ம் தேதி முதல், இந்த சீசன் டிக்கெட்டை பயன்படுத்தி பயணிகள் பயனடைய உள்ளனர். திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை, டிக்கெட்கள் அச்சடிக்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

இது குறித்து, மதுரை போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சீசன்
டிக்கெட்டை பயணிகள் பெற்று செல்லத் துவங்கி உள்ளனர். சலுகை கட்டணம் குறித்த
தகவல் பயணிகள் மத்தியில் அதிகளவில் சென்றடையும் நிலையில், அடுத்தடுத்த
மாதங்களில் இந்த சலுகை கட்டணத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment