பள்ளிகளில் மாணவ – மாணவிகள் இப்பொதெல்லாம் அதிக அளவில் செல்போன் பயன்படுத்த தொடங்கி
விட்டார்கள் . இதனால் படிக்கும் கவனம் சிதறி விடுவதாக கல்வித்துறை ஏற்கனவே
செல்போன்
பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது .
வகுப்பில் பாடம் நடக்கும் போது
எஸ்.எம்.எஸ் அனுப்புவது , ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பேசுவது ,
விலையுரந்த கேமரா செல்போன்களை வைத்து போட்டு
எடுத்துக் கொள்வது போன்றவைகளால் மிகச் சாதாரணமாக அழிவு பாதை நோக்கி மாணவர்கள்
செல்கிறார்கள் .
இதனால் இளம் பருவத்தினர் தவறான பாதையை
நோக்கிப் போக இந்த செல்போன்களால் அதிக வாய்ப்பு இருக்கிறதென்று கல்வித் துறை
கடுமையான சட்டத்தை இப்போது கொண்டுவந்துள்ளது . இது குறித்து பள்ளிக்கல்வித்துறை
அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள்
செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதித்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில்
இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை
விடப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர்கள்
பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டு வருவதாக புகார் வந்தால் மீண்டும் தமிழ்நாடு
முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எந்த ஒரு மாணவ, மாணவியும் செல்போன் கொண்டு வரக்கூடாது.
அவ்வாறு மீறி கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் செல்போனை ஆசிரியர் வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு செல்லும்போது வழங்குவார். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்
No comments:
Post a Comment