தேர்வுத் துறை அறிவிப்பு: விரைவில் துவங்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வை எழுத, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், "தத்கால்' திட்டத்தின் கீழ், வரும், 16, 17ம் தேதிகளில், TATKAL செய்ய CLICK HERE என்ற இணையதளம் வழியாக, பதிவு செய்யலாம். இணையதளத்தில்,
புகைப்படத்தை, "அப்லோட்' செய்ய வேண்டும். அதன் பின், புகைப்படத்துடன் கூடிய, பதிவு செய்த விண்ணப்பத்தையும், கட்டணம் செலுத்துவதற்கான செலானையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, கூடுதலாக, 1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை, 18ம் தேதி, சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செலுத்த வேண்டும். இந்த வகை தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டும், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment