. 30 சதவீத நிதி, ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், திட்ட அறிக்கைகளை தயாரித்து, அதற்கு தேவைப்படும் நிதியை அளிக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு, அறிக்கை அளிக்கும். அதை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து, நிதியை ஒதுக்கீடு செய்யும். ஒவ்வொரு ஆண்டும், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிதி ஒதுக்கீடு செய்துவந்த மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்கு அதை, 1,500 கோடி ரூபாயாக குறைத்து விட்டது என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு (2012 - 13), 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு (2013 - 14), 3,000 கோடி ரூபாய்க்கு, திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம். ஆனால், இதில், 50 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், அவர்கள் கேட்ட நிதியில், 50 சதவீத நிதியைத் தான், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக, நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி, சிறிது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, 460 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிகிறது. மத்திய அரசு நிதியில், புதிய பள்ளி கட்டடங்கள், ஏற்கனவே இயங்கி வரும் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, இந்த நிதியை குறைத்திருப்பதால், பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில், தேக்க நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment