இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி
இடைநிலை ஆசிரயர்களுக்கு 6வது ஊதியக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதிகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்ககோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வருகிற 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மிகப்பெரிய மறியலை நடத்த திட்டமிட்டுள்ளது. இதைப்போலவே மற்ற ஆசிரியர் சங்கங்களும் பல போராட்டங்களை அறிவித்துள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுவதை உணர்ந்த அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் கவனத்திற்கு இவ்விசயம் சென்றுள்ளதாகவும் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கல்வித்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இது சம்பந்தமாக தமிழக ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இடயே உள்ள ஊதிய வேறுபாடு மற்றும் கல்வித்தகுதி மற்றும் பணி நிலைகள் குறித்து ஒப்பீடு ஆய்வை தொடக்கக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது ஓரளவு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தும். முதல்வர் அவர்கள் இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்க்கிறது. முதல்வரின் அறிவிப்பை அனைத்து ஆரியர்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை.via-mptnptf
No comments:
Post a Comment