scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 13, 2013

இடமே வலம்: இன்று சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்-

இடமே வலம்: இன்று சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்-
 
 
 
உலகின் மொத்த மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறான பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆக.,13ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் என்பது ஒருவருக்கு, இயற்கையிலே அமைந்து விடுகிறது. மூளை வளர்ச்சியை பொறுத்து இது அமைகிறது.



இவர்களையும் பாருங்கள்



உலக மக்கள் தொகையில் வலது கை பழக்கம் உடையவர்களே அதிகம் இருப்பதால், அனைத்து பயன்பாட்டு பொருட்களும் அவர்களுக்கு ஏற்றதாகவே தயாரிக்கப்படுகிறது. இதனால் இடது கை பழக்கம் உள்ளவர்கள், சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே கார், சமையல் பாத்திரங்கள், கதவுகள், கம்ப்யூட்டர் மவுஸ், கீபோர்டு, பாத்ரூம் குழாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்றதாகவும் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கு நிறுவனங்களும், அரசும் முன்வரவேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. மேலும் இவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையை தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமிதாப்பச்சன், அரிஸ்டாட்டில், ஜேம்ஸ் கேம்ரூன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும், இடது கை பழக்கம் உடையவர்கள்.

No comments:

Post a Comment