தமிழகத்தில்
உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ&மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு
உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
'ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை
வைத்திருக்கிறது. இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்
கோரிக்கை அடிப்படையில் இது கொண்டு வரப்படுகிறது' என்று கூறியிருக்கும்
தமிழக அரசு, 'மாணவர்கள் பேன்ட் மற்றும் சட்டையும்... மாணவிகள் சேலை அல்லது
சுடிதாரும் அணிந்து வரலாம். இதைத் தவிர்த்து ஜீன்ஸ் பேன்ட், பனியன்
உள்ளிட்ட எந்த ஆடைகளையும் அணிந்து கல்லூரிக்குள் வருவதற்கு அனுமதியில்லை'
என்றும் தெளிவு படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment