scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 20, 2013

விரைவில் "கற்க கசடற' பள்ளிக்கல்வித்துறை திட்டம்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, கடந்த ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவக்கப்பட்டது.கற்க கசடற என்ற தலைப்பில் வெளிவர உள்ள இந்த மாத இதழில் துறை சார்ந்த சிறப்பு நிகழ்வுகள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், சிறப்பு செய்திகள், முப்பருவ கல்வி முறை விளக்கங்கள், தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் சேர்க்கை, ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஒருமாத காலத்தில் இந்த மாத இதழ் வெளியிடப்படும்' என்றார்.

No comments:

Post a Comment