வேடசந்தூர், பிரெடரிக் ஏங்கல்ஸ் தாக்கல் செய்த மனு: கடந்த, 2005ல், தொகுப்பூதியத்தில், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப் பட்ட நான், 2006ல் பணிவரன்முறை செய்யப் பட்டேன். கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணிபுரியும் எனக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், சம்பளத்தில், 10 சதவீதம் ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இதுவரை, 46,830 ரூபாய், பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பற்றி, தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டு, நிதித்துறை செயலரிடம் மனு அளித்தேன். அவர், நீங்கள் பெறுவதை ஓய்வூதியமாக கருத முடியாது என, பதில் அளித்தார்.
சலுகைகள் இல்லை : ஏற்கனவே இருந்த ஓய்வூதிய திட்டத்தில் இருந்த சலுகைகள், புதிய பங்களிப்பு திட்டத்தில் இல்லை. 2003 ஏப்.,1ல் இருந்து அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், புதிய பங்களிப்பு திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். எங்களையும், ஏற்கனவே பணியில் உள்ளவர்களையும் அரசு வேறுபடுத்தி பார்க்கிறது. புதிய திட்டத்தை ஒழுங்குபடுத்த, வரன்முறைப்படுத்த, சட்டப்பூர்வ அதிகார அமைப்பை, அரசு
ஏற்படுத்தவில்லை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : "புதிய ஓய்வூதிய திட்டம் சட்டவிரோதமானது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் தீர்ப்பாயமும், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
அரசின் ஓய்வூதிய சட்ட விதி மற்றும் பொது சேமநல நிதி, உபவிதி திருத்தம் சட்டவிரோதம் என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும், ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றி, ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, என்.பால் வசந்தகுமார், நிதித்துறை செயலர் (ஓய்வூதியம்), தொடக்க கல்வித் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment