6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தமிழ், ஆங்கிலம் வாசிக்க தெரிய வேண்டும் கல்வி அதிகாரி அறிவுரை
திருப்பூர்,
6,7,8-ம் வகுப்பில் படிக் கும் அனைத்து மாண வர்களுக்கும் தமிழ் மற்றும்
ஆங்கிலம் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று திருப் பூரில் நடைபெற்ற
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
ஆனந்தி அறிவுரை வழங்கினார்.கலந்தாய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கூட் டம் திருப்பூர் பிஷப் உப காரசாமி மேல்நிலைப்பள்ளி யில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி தலைமை தாங்கி னார். மாவட்ட கல்வி அதி காரி ஜெயலட்சுமி, அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்-ஆங்கிலம்
கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி பேசும் போது கூறியதாவது:-
பெரும்பாலான பள்ளி களில் 6,7,8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வாசிக்க தெரிவதில்லை. எழு தவும் தெரிவதில்லை. ஆகவே உங்கள் பள்ளிகளில் அவ்வாறு வாசிக்கவும், எழுதவும் தெரி யாத மாணவர்களை தனியாக பிரித்து எடுத்து அவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து காலையில் தமிழும், மாலை யில் ஆங்கிலமும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வருங்காலத்தில் எல்லோருக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிய வேண்டும் என்பதற் காகத்தான் இந்த சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாதிரி தேர்வுகள்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் வெற்றி பெற இப்போது இருந்தே நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி தேர்வுகள் நடத்தும் போது கேள்வித்தாள்களை மாண வர்களிடம் முதல்நாளே கொடுத்து விடுங்கள். மறுநாள் அவர்கள் வந்து தேர்வு எழு தட்டும். அப்போது மாணவர் கள் அதிக மதிப்பெண் பெறு கிறார்களா? என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவைப்படும் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லையென் றால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்களை நீங்களே நியமனம் செய்து கொள்ளுங்கள். அதே சமயம் அந்த ஆசிரியர்கள் குறித்த எந்த ஆதாரங்களும் பள்ளியில் இருக்கக்கூடாது. அவர் களுக்கு பணியாறறிய காலத்திற்கான சான்றிதழ் களும் வழங்கக்கூடாது.
பல்வேறு பிரச்சினைகள்
தற்போது பல பள்ளிகளில் இருந்து அடிக்கடி பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பள்ளியில் நடககும் சம்பவம் உண்மை என்று தெரியவந்தால் சட்டப்படி அதற்கான நட வடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் வேண்டாத சிலர் பொய்யான தகவல்களை பரப்பி பள்ளிக்கும், ஆசிரியர் களுக்கும் அவப்பெயரை உண்டாக்க நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர் கள் ஆவார்கள்.
எனவே நீங்கள் முடிந்தவரை இதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறாமல், மாணவர் களை அரவணைத்து செல்லுங் கள். உங்களால் தீர்க்க முடி யாத பிரச்சினை என்றால் எங் களுக்கு உடனடியாக தகவல் கொடுங்கள்.
பள்ளியும், மாணவர்களும் நல்ல முறையில் இருக்க வேண் டும். யாருமே எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் கல்வித்துறையின் நோக்கம் ஆகும். எனவே மாணவர்களின் தேர்ச்சி விகி தம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பணியாற்றுங்கள்.
இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி பேசினார்.
கூட்டத்தில் 183 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment