scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 24, 2013

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ஒரே வினாத்தாள் : உடனுக்குடன் தகவலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப உத்தரவு.

என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (25ம் தேதி) நடக்கிறது. இத்தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு "ஸ்பெஷல்' பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடி
.என்.பி.எஸ்.சி தேர்வில் பொதுவாக ஏ, பி, சி, டி என நான்கு வகையான வினாத் தாள்கள் அச்சிடப்படும். ஆனால் நாளை (25ம் தேதி) நடக்கும் குரூப் 4 தேர்வுக்கு ஒரே வகையான வினாத் தாள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள தேர்வர்கள் பார்த்து எழுதுவதை தடுக்கும் வகையில் ஒரு தேர்வு அறைக்கு ஒரு கண்காணிப்பாளருக்கு 20 பேர் ஒரு மட்டுமே தேர்வு எழுத உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக காலை 9.50 மணிக்கும், தேர்வு தொடங்கிய பின்னர் காலை 10 மணிக்கும், தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வரும் கால அவகாச நேரமான காலை 10.30 மணி மற்றும் தேர்வு முடிவடைந்த பின்னர்மதியம் 1 மணி என நான்கு முறை அனைத்து தேர்வு கூட தலைமை கண்காணிப்பாளர்கள் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் மாடியில் இடம் ஒதுக்காத வகையிலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்களை தனியாகவும், பயன்படுத்தப்படாத வினாத்தாள்களை தனியாகவும் கட்டுகளாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வில் புதியதாக தேர்வு செலவு விபரத்தை தனியாக தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு பணிகளை கண்காணிக்க தாலுகாவுக்கு டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு மையங்களில் வெப் காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும், வீடியோ பதிவு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சார் நிலை கருவூலங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இரவு, பகலாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஆலோசனை: டி.என்.பி.எஸ்.சி தேர்வை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தேர்வு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நெல்லை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். டி.என்.பி.எஸ்.சி சார்பு செயலாளர் சங்கரசுப்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டப் பணிகள்) செல்வ கணபதி, டி.என்.பி.எஸ்.சி சார்பு செயலாளர் சங்கரசுப்பு, அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், முனியாண்டி, லோகநாதன், நாராயணன், பி.ஆர்.ஓ மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இக்கூட்டத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்யாததால்அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள், அலுவலர்கள் கூட்ட அரங்கில் ஒரேநேரத்தில் குவிந்ததால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

No comments:

Post a Comment