scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

July 30, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு கேள்வித்தாளில் மாற்றம் தேவை.

ஆசிரியர் தகுதி தேர்வு கேள்வித்தாளில் மாற்றம் தேவை.


கோவை: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் 2க்கான கேள்வி தாளில் மாற்றம் கொண்டு வர ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்படி தமிழகத்தில் அரசுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆறரை லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள் 1 தேர்வும், பட்டப்படிப்புடன் பி.எட் படித்தவர்களுக்கு தாள் 2 தேர்வும் நடத்தப்படுகிறது. ஆனால் இத்தேர்வில் தாள் 2 எழுதுவோருக்கான கேள்விதாளில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதுவோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: முதுகலை மற்றும் டிஇடி இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் 1) பாடதிட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை. முதுகலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பாடம் சார்ந்த பாடத்திட்டத்தில் தான் 75 சதவீத கேள்விகள் கேட்கப்படுகிறது. 5ம் வகுப்பு வரை கற்று தரும் இடைநிலை ஆசிரியர்கள் அனைத்து பாடங்களையும் எடுப்பதால் பாட திட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் 6 முதல் 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு(தாள் 2) பாட திட்ட  கேள்வி தாளில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்படுவோர், பணியில் சேர்ந்த பிறகு குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே (முதன்மை பாடம்) மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், அறிவியல் பாடங்களை படித்த ஆசிரியர்கள், அந்த பாடங்களை மட்டுமே கற்பிக்கின்றனர். ஆனால் தகுதி தேர்வில் முதன்மை  பாடங்களில் இருந்து 30 மதிப்பெண்ணுக்கு (150 மதிப்பெண்) மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறது. உதாரணமாக கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமூக அறிவியல் போன்ற முதன்மை பாடத்தை படித்தவர்களுக்கு அப்பாடத்தில் இருந்து 30 கேள்விகள் மட்டும் கேட்கப்படுகிறது. மீதி மதிப்பெண்ணுக்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல், சூழ்நிலையியல், புவியியல், பொருளாதாரம், பொது அறிவு , குடிமையியல்போன்ற பாடங்களில் இருந்து இடம்பெற்றுள்ளன.

அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 4 பிரிவு உள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 9 வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகிறது. கணிதத்தை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு, 25 கேள்வி மட்டுமே அப்பாடத்தில் இடம்பெற்றுள்ளன.
பட்டப்படிப்பு மற்றும் கல்வியியலில் குறிப்பிட்ட பாடத்தை படித்து தனித்திறன் பெற்றவர்களுக்கு, பிற பாடங்களில் அதிக கேள்விகள் (120 மதிப்பெண்) கேட்டால் எப்படி பதில் அளிக்க முடியும். எனவே அவரவர் படித்த முதன்மை பாடங்களில் இருந்து 75 சதவிகிதத்திற்கு மேல் கேள் விகள் கேட்க வேண்டும். எனவே தாள்-2 பாடத்திட்டத்தில் உள்ள தமிழக அரசு குறைகளை களைய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். அக்குழுவினர் பாடதிட்டத்தை மாற்றி அமைத்த பிறகு, இனிவரும் காலங்களில் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
தினகரன் - கோவை.

No comments:

Post a Comment