scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

July 30, 2013

இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி.

இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி.

திருப்பூர்:  நடப்பு கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான “இன்ஸ்பயர்‘ விருதுக்கான அறிவியல் கண்காட்சி, நாளை (31ம் தேதி)
காங்கயம் பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் பாலிடெக்னிக் கல்லு£ரியில் நடக்கிறது. அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில், “இன்ஸ்பயர் விருது‘க்கான அறிவியல் கண்காட்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும், அறிவியல் கண்டுபிடிப்பில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும். இத்தொகையை பயன்படுத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை தயாரித்து, மாவட்ட அளவிலான “இன்ஸ்பயர்‘ விருதுக்கான அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள், படைப்புகளை காட்சிக்கு வைக்க வேண்டும்; சிறந்த எட்டு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான கண்காட்சிக்கு அனுப்பப்படும்.

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் படைப்புகளில், ஐந்து சதவீத படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் தே சிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு “இன்ஸ்பயர்‘ விருது வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான “இன்ஸ்பயர்‘ விருதுக்கான அறிவியல் கண்காட்சி, காங்கயம் பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் பாலிடெக்னிக் கல்லு£ரியில் நாளை (31ம் தேதி) நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க 302 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தலா 5,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையில், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட் ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாண வியர், தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்க உள்ளனர்.
மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, மதிப்பெண் வழங்க கல்வித்துறை சார்பில் 10 பேர் அடங்கிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைக்க உள்ளார்.

No comments:

Post a Comment