சென்னை: ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என,
அனைத்து உடற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜா கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர்கள், 25 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றுவதால், அவர்களுக்கு கணக்கு தேர்வை ரத்து செய்து, பதவி உயர்வு வழங்க உத்தரவிட்ட அரசுக்கு, நன்றியை தெரிவிக்கிறோம். மதுரையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த உள்ளோம். கோடம்பாக்கத்தில், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் பாஸ்கரை தாக்கிய கும்பலுக்கு, கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர, அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, அனைத்து மெட்ரிக், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment