ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க உள்ளது. இதன் மூலம் வருவாய் துறை அலுவலகத்தில் சான்றிதழுக்காக கிராமப்புற மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். அரசு முடிவு: மாநிலம் முழுவதும், பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து, ஜாதி,வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுகின்றனர். தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் உடனடியாக கிடைப்பதில்லை என்பதால், கிராம மக்கள் பல நாள் நடையாய், நடக்கின்றனர் அல்லது புரோக்கர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். இதை தடுக்க, கிராமபுறங்களிலுள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் முதல்கட்டமாகஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் ஆகிய, ஐந்து சான்றிதழ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 4,200 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. ஐந்து சான்றிதழ்களையும் பெற்று தருவதற்காக, கடந்த சில நாட்களாக, சேலம் மாவட்ட கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர் ஒருவர் கூறியதாவது: கம்ப்யூட்டர் மூலம்...: கிராமங்களில் ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் பெற விரும்பும் மக்கள், அருகிலுள்ள அதற்கான ஆவணத்துடன் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஆன் - லைன் மூலம், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,வுக்கு அனுப்பி வைக்கப்படும். மனுக்கள் மீது வி.ஏ.ஓ.,க்கள் விசாரணை நடத்தி, அதிகாரிகள் கையெழுத்திட்ட சான்றிதழ் ஆன் - லைன் மூலமாகவே, குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மனுதாரர், கூட்டுறவு சங்கத்தில் சென்று சான்றிதழை பெற்று கொள்ளலாம். முதல்கட்டமாக, சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில், கூட்டுறவு சங்கம் மூலம் சான்றிதழ் பெற்று தரும் பணி துவங்கியுள்ளது. இதற்காக மனுதாரர், 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், 6 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்தப்படும். மீதி தொகையை சேவை செய்து தரும் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்படும். இதில், அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மூலமேமேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment