உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமராவதி சைனிக் பள்ளியில் 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2015-2016-ஆம் ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களினால், அந்த நுழைவுத் தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment