அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக 'பாஸ்' மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் 'பாஸ்' செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
(Refer para 9 (c) minimum elgibility mark)
பாஸ் மார்க் எவ்வளவு?
அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து 'பாஸ்' செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். 'பாஸ்' செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். 'ஃபெயில்' ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற 'பாஸ்' மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த மாற்றம்?
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக 'பாஸ்' மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது.
No comments:
Post a Comment