மாணவர்
எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும்
மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அரசு உதவிபெறும்
மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன்
காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க
வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து,
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் திடீர் விசிட் நடத்தி,
அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு உதவி
பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, தமிழகத்திலுள்ள 1,044 அரசு உதவிபெறும்
மேல்நிலைப்பள்ளிகளில், உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்கள் மற்றும் அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த மாணவர் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் மாணவர்களின் வருகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது தெரியவந்தது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment