இலவச "லேப்-டாப்' பெறும் மாணவர்களில் சிலர், சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு அவற்றை விற்று, ஏமாறுகின்றனர். இலவச பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள், லேப்-டாப் என 16 வகையான கல்வி நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியரின் கல்லூரி படிப்புக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 13,389 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 21.42 கோடி ரூபாய்.
சில மாணவ, மாணவியர் லேப்-டாப் பயன்படுத்த அக்கறை காட்டுவதில்லை. நண்பர்களுடன் பொழுதை கழிக்கவே விரும்புகின்றனர். அவ்வாறான மாணவர்கள், இலவசமாக கிடைத்த லேப்-டாப்பை, விலைக்கு விற்கின்றனர். 6,000 முதல் 8,000 ரூபாய் வரை, அந்த லேப்-டாப் விற்கப்படுகிறது.
கல்லூரி மாணவ, மாணவியர் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள சில ஆசிரியர்களும், இலவச லேப்-டாப்களை விலைக்கு வாங்கிக்கொள்வது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் சிலர், விற்பனை பிரதிநிதி போல் செயல்பட்டு, தங்கள் பகுதியில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரிடம் பேரம் பேசி, லேப்-டாப்களை குறிப்பிட்ட விலையில் வாங்குகின்றனர்.பெற்றோரில் சிலர், போதிய கல்வியறிவு பெறாத கூலி தொழிலாளர்களாக உள்ளனர். லேப்-டாப் பற்றி முழுமையாக அறியாததால், ஆடம்பரப் பொருளாக கருதுகின்றனர். குடும்ப வறுமை கருதி, லேப்-டாப்பை விற்குமாறு, பிள்ளைகளை வற்புறுத்துகின்றனர். குடும்பத்தேவை மற்றும் கடன் பிரச்னைக்காக சில மாணவ, மாணவியர் லேப்-டாப் விற்க, பெற்றோரும் காரணமாக உள்ளனர்.அதேநேரத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதோடு, கடமை முடிந்து விட்டதோடு, கல்வித்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர். அதை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா அல்லது விற்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
குமார் நகர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனிடம் கேட்டபோது, ""நடப்பாண்டில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப், அனைத்துவசதிகளையும் கொண்ட "லேட்டஸ்ட் மாடலாக' உள்ளது; மாணவர்கள், அதை பொக்கிஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். சில மாணவர்கள், அதன் அருமை தெரியாமல், பணத்துக்கு ஆசைப்பட்டு விற்று ஏமாறுகின்றனர். இதுதொடர்பாக, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
November 23, 2014
சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு இலவச "லேப்-டாப்'களை விற்கும் மாணவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment