'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு: உடல் ஊனமுற்ற குழந்தைகளை கொண்டிருக்கும், அரசு ஊழியர்களுக்கு வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அத்துடன், இடமாற்றம் செய்து, புதிய பொறுப்பை ஏற்கவில்லை எனில், அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி (வி.ஆர்.எஸ்.,) கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த உத்தரவு, மதி இறுக்கம் (ஆட்டிசம்) என்ற, மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளைக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த வகை குறைபாடுடைய குழந்தைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம் என்பதால், அவையும், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment