scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 14, 2014

நடுநிலைப்பள்ளிகட்கு அக்டோபர்-23,24 ஆகிய நாட்களை விடுமுறையாக அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்குகோரிக்கை

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டக்கிளையின் செயற்குழுகூட்டம் இன்று கூடியது.அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நாட்காட்டியின் படி வரும் அக்டோபர் 22 தேதி ஒருநாள் மட்டும் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் 23.10.2014 அன்று தமிழகத்தில் பெரும்பாலான இல்லங்களில் தீபாவளி நோன்பு கொண்டாடுவது மிகப்பிரசித்தம்.மேலும் அன்று பள்ளிக்கு மாணவர் வருகையும் அப்பண்டிகையின் காரணமாக மிகக்குறைவாக இருக்கும்.மேலும் ஆசிரியர்களில் பலர் நோன்புகாரணமாக R.L எடுக்க உள்ளனர்.எனவே ஆசிரியர்களின் வருகையும் குறைவாக இருக்கும்.

மேலும் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு பலர் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டி உள்ளதாலும்,தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் தற்போது நடைபெறும் குறுவள மைய பயிற்சி நாட்களைக்கணக்கில் கொள்ளாமல் 220 வேளைநாட்களுக்குண்டான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு 7 குறுவள மைய பயிறை நாட்கள் நடைபெற உள்ளதால்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த உத்திரவுப்படி அந்நாட்களையும் வேலை நாளாக கருத்தில் கொண்டும்,
தமிழகம் முழுவது உள்ள தனியார் சுயநிதி பள்ளிகள் பல ஏற்கனவே தமது நாட்காட்டிகளில் 22 முதல்26 வரை விடு்முறை அறிவித்துள்ளதால் அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகட்கும் தீபாவளிபண்டிகைக்கு மறுநாள் 23.010.2014 மற்றும் 24.10.2014 ஆகிய இரு நாட்களை சேர்த்து தீபாவளிப்பண்டிகை விடுமுறை என அறிவிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களைக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாவட்டச்செயலர் திரு கோபாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கைகடிதம் இயக்குனர் அவர்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,
மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து மாவட்டக்கிளைகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்றி இவ்வாரம் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுப்பவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment