தமிழகம்
முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி
பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு
உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில்,
தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்,
உதவியாளர் ஆகிய
பணியிடங்கள் உள்ளன.
அரசாணை
: கடந்த, 2012ம் ஆண்டுக்கு பின்,
தமிழகம் முழுவதும், அங்கன்வாடி பணியாளர், 8,264 பேர், குறு அங்கன்வாடி
பணியாளர், 427 பேர், உதவியாளர், 8,497 பேர்
என, 17,?90 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, கலெக்டர்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், அதற்கான பணியை, அதிகாரிகள்
மேற்கொண்டு வருகின்றனர். நவ., 15ம் தேதி
அரசு அறிவிப்புப்படி, அக்., 25ம் தேதிக்குள்
விண்ணப்பத்தை பெற்று, நவ., 5ம்
தேதிக்குள் நேர்காணல் நடத்தி, நவ., 15ம்
தேதிக்குள், பணி நியமன உத்தரவை
வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,
அதற்கான வாய்ப்பு குறைவு. அங்கன்வாடி பணியில்,
இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மாறுதல் வழங்கிய
பின் தான், காலியிடம் தொடர்பான
அறிவிப்பு வெளியிட வேண்டிய கட்டாயம்
உள்ளதால், பணி நியமனம் டிசம்பர்
இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது.
5 கி.மீ., : அங்கன்வாடி அமைப்பாளர்
பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். உதவியாளர் பணிக்கு, எட்டாவது வரை படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட மையத்தில் இருந்து, 5 கிலோ மீட்டருக்குள் வசிக்க
வேண்டும்.
பொது பிரிவு, தாழ்த்தப்பட்டவர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என, ஒவ்வொரு மையம் வாரியாக, ஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்படும். அதனடிப்படையில், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment