டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் வரும் திங்கள் (22.9.14) அன்று தீர்ப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு அரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக நடந்து முடிந்த பணி நியமன கலந்தாய்வின் அடிப்டையில் பணி நியமனம் நடைபெறும். ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உடனடியாக ”தீர்ப்பு-மீள் ஆய்வு” கோரி மனு செய்யப்பட வாய்ப்பு உண்டு.வெயிட்டேஜ் குறித்த வழக்கில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் ஏதேனும் ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தினால், அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.”வழக்கின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?” என அறிந்து கொள்வதற்காக கலந்தாய்வில் பங்கேற்ற தேர்வர்களும், பட்டியலில் இடம்பெறாத தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் என இரு தரப்புமே மிக ஆவலாக உள்ளனர். பொது மக்களும், கல்வியாளர்களும் மாணவர்களின் கல்வி நலனை காக்கஉடனடியாக பணி நியமனம் நடைபெற வேண்டும் என கருதுகின்றனர்.
No comments:
Post a Comment