ஈரோடு அரசு மருத்துவமனையில், தாய்க்கு சிகிச்சை அளிக்க, கலெக்டர் காத்திருந்தார்.ஈரோடு மாவட்ட கலெக்டராக பணிபுரிபவர், சண்முகம். இவரது தாய் லட்சுமி, 81; நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர். இவர், முதுகு தண்டுவட பிரச்னைக்கு, அப்பகுதியில் சிகிச்சை பெற்றார். பின், வயிறு மற்றும் கால் நடக்க முடியாத நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அப்போது, இடுப்பின் பின்புற பகுதியில் புண் ஏற்பட்டு அழுகியது. உட்கார, நடக்க, படுக்க முடியாமல் அவதிபட்டார். இதுபற்றி, தன் மகனான கலெக்டரிடம் கூறினார். ஈரோடு, அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி கூறி, தாயை ஈரோடு வருமாறு அழைத்தார்.
அதன்படி, தாயும், கலெக்டர் சகோதரி ருக்மணியும், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தனர். கலெக்டர் சண்முகம், காலை, 10:00 மணிக்கே, அரசு மருத்துவமனைக்கு வந்து, நீண்ட நேரம், தாய்க்காக காத்திருந்தார்.மதியம், 2:00 மணிக்கு, மருத்துவமனைக்கு வந்த அவர், உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. புண் முழுமையாக ஆறும் வரை தங்கி சிகிச்சை பெற, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.தாய்க்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில், கலெக்டர் காத்திருந்ததை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
No comments:
Post a Comment