தமிழ் ஆசிரியரகளை ஏன்
சமூக அறிவியல் தொடர்பானப் பணியில்
அமர்த்தக்கூடாது?
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும்
ஒவ்வொரு தமிழாசிரியரும் சமூக
இது தமிழ் ஆசிரியரின்
முதன்மைப் பாடத்தில் கேட்கப்படும் வினாக்களை விட அதிகமானவை.ஏனெனில்
தமிழ் ஆசிரியரின் முதன்மைப் பாடமான தமிழ் பாடத்தில்
இருந்து வெறும் 30 வினாக்களுக்கள் மட்டுமே தேர்வில் கேட்கப்படுகின்றன.ஆனால் தமிழாசிரியர்கள் அனைவரும்
ஒரு சமூக அறிவியல் ஆசிரியருக்கு
இணையாகத் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும்,ஆசிரியர் தகுதித்
தேர்வு மதிப்பெண் ஆசிரியர் நியமனத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.இத்தகைய சூழலில் சமூக
அறிவியல் ஆசிரியருக்கு இணையாகத் தேர்வு எழுதும் தமிழ்
ஆசிரியர்களை சமூக
அறிவியல் ஆசிரியர்கள்
நியமனத்தில் ஏற்படும் பின்னடைவு பணியிடங்களை,சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு எவ்வித
பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் சமூக
அறிவியல் ஆசிரியர் பணியினை தமிழ் ஆசிரியர்களுக்கு
வழங்கிட பரிந்துரைக்கலாம்.
காரணம்
:
ஒரே வகையான தேர்வு
எழுதியும் மேற்கண்ட இரு வகையான ஆசிரியர்களின்
பணி நியமனம் அவர்களின் இளங்கலைப்
பாடத்தினைப் பொறுத்தே அமைகிறது.
கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரே
வகையான தேர்வு எழுதியும் தமிழாசிரியர்களுக்கு
தற்போதைய நிலவரப்படி வெறும் 772 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளன.ஆனால்
சமூக அறிவியல் பாடத்திற்கு மொத்தமாக 4575 (புவியியல்-916,வரலாறு-3659) ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஆனால் புவியியல்
மற்றும் வரலாறு ஆகிய இரு
பாடங்களில் என்னெற்ற காலிப் பணியிடங்கள் சாதி
வாரியாக பின்னடைவு பணியிடங்களாக உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்வு
:
1.மேற்கண்ட
காலிப் பணியிடங்களை சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு
எவ்வித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில்,தமிழாசிரியர்களைக்
கொண்டு நிரப்பபினால்,பல தமிழாசிரியர்கள் பயனடைவர்.இதனால் பள்ளிகளில் உள்ள
காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு மாணவர்களும் பயனடைவர்.
2.அல்லது இனி வரும் தேர்வுகளில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் முதன்மைப் பாடத்தில் இருந்து அதிகப்பட்ச வினாக்கள் கேட்பதன் மூலம்,ஒவ்வொரு ஆசிரியருக்கும் அதிக மதிப்பெண் பெற்று பயனடைவர்.
No comments:
Post a Comment