scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 28, 2014

TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.

  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள். 

          ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது. காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். 

          வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்
          சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

        உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

              கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment