scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 10, 2014

TET தேர்வு எழுதிய மூத்த ஆசிரியர்களை பலிகெடா ஆக்கும் அரசானை எண்:71

தற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும் முறையினை அரசானை எண்.71ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSCக்கு 10 மதிப்பெண்ணும், DEGREEக்கு 15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும். வேலைக்குசெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சனை:

1) ஆசிரியர் தகுதிதேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பது என்பது சரியான முறை. ஏனெனில் இந்த தேர்வு அனைவராலும் ஒரே நேரத்தில்., ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு எழுதப்பட்ட பொதுவான தேர்வு ஆகும்.

2) +2 க்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பது என்பது மிகவும் தவறான முறை. ஏனெனில் +2 படிப்பை ஒவ்வொருவரும் பல்வேறு காலகட்டங்களிலும், பல விதமான பாடபிரிவுகளிலும், பல விதமான பள்ளிகளிலும் பயில்கின்றனர்.

இங்கு ஒக்கேசனல் பாடபிரிவில் செய்முறைக்கு 450 மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் MATRIC பள்ளி, CBSE பள்ளி, INTERNATIONAL பள்ளி என்று பல்வேறு விதமான பள்ளிகளில் பயில்கின்றனர். மேலும் பள்ளிகளில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் etc என்று பல விதமான பள்ளிகளில் பயில்கின்றனர். இதில் எங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு முரண்பாடுகளை கொண்ட படிப்பை அனைவரும் சமம் என்று கூறுவது மிகவும் தவறானது.

3) மேலும் பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்பிலும் பல்வேறு விதமான முரண்பாடுகள் உள்ளது. இதிலும் படித்த காலங்கள், படித்த கல்லூரிகள், படித்த பாடம் மற்றும் தேர்வு முறை முற்றிலும் வேறுபடுகிறது. கல்லூரிகள், என்று பார்த்தால் தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, தன்னாட்சி கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலை என்று பல உண்டு. 15 வருடங்களுக்கு முன்பு இன்டர்னல் மதிப்பெண் என்பதே கிடையாது. ஆனால் இன்று 25 மதிப்பெண் இன்டர்னல் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணே மூன்று வருடத்திற்கு 750க்கு மேல் கிடைக்கிறது. இன்றைய சூல்நிலையில் நிறைய வசதிகளுடன் கூடிய தனியார் கல்லூரிகள் அதிகம். படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

4) இந்த முறை வேலை கிடைக்கவில்லை என்றால் அடுத்தமுறை தகுதிதேர்வு எழுதி அதன் மதிப்பெண்ணை அதிகபடுத்த முடியும். ஆனால் எனது +2, UG, B.ED மதிப்பெண் என்பது நிரந்தரமானது. அதை எப்படி என்னால் அதிகப்படுத்த முடியும். எப்படி பார்த்தாலும் எனது பணி வாய்ப்பு என்பதே எதிர்காலத்தில் இல்லை என்ற சூல்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

5) மேலும் +2, UG, B.ED என்பது தகுதிதேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகளே. அடிப்படை தகுதி படிப்புகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது என்பது தவறான முறையாகும்

6) பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டிக்கு வெயிட்டேஜ் மதிப்பென் வழங்காதது மிகபெரிய ஏமாற்றமாக உள்ளது. ஏன் பணி அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள் கிடையாதா? எந்த தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றாலும் பணி அனுபவம் உண்டா என்று தான் முதலில் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் ஆசிரியர் படிப்பை முடித்தவுடன் எம்பிளாய்மென்ட்ல் பதிவு செய்கிறார்கள். எதற்காக வயதுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் இங்கு சீனியாரிட்டிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படவில்லை.

7) தற்பொழுது கடைபிடிக்கப்படும் முறையில் வெறும் +2, UG, B.EDல் பெறபட்ட மதிப்பெண்களை கொண்டு மட்டுமே ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையானது சரியாதல்ல. மதிப்பெண்ணை மட்டுமே அளவுகோலாக கொண்டால் இந்த ஆசிரியர் தேர்வு முறைசிறந்ததாக அமையாது.

8) நமது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் பல விதமாக உள்ளதால் தான் பொதுவான தேர்வு முறையே வந்தது. அந்த பொதுவான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்தால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். மேலும் சீனியாரிட்டி மற்றும் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம்  அளிக்கப்பட வேண்டும்.

9) அரசானை எண்.71ன் படி ஆசிரியர்களை தேர்வு செய்தால் தனியார் பள்ளியில் பயின்று, தனியார் கல்லூரியில் பட்ட மற்றும் பட்டய படிப்பை முடித்தவர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். எங்கு அதிக மதிப்பெண் பெறப்படுகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஏன் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்ற ஏழை கிராமப்புற மாணவர்கள் யாரும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என நினைக்ககூடாதா? கல்லூரி படிப்புகளின் மதிப்பெண்கள் அரசு வேலைக்கு செல்லும் போது எடுத்து கொள்வது முன்னவே தெரிந்து இருந்தால் நாங்களும்
ஒவ்வொரு தேர்வின் முக்கியத்துவம் கருதி படித்து இருப்போம். கஷ்டப்பட்டு படித்து தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

10) இன்று அனைத்தும் தனியார்மயம். எங்கும் எதிலும் கம்யூட்டர்மயம்.பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் இருந்த இடத்தில் இருந்து கேட்டு தெரிந்துகொள்ள செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி. SMART CLASS வசதி என்று கல்விதுறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. எனவே இவ்வளவு டெக்னாலஜி  கொண்ட இந்த காலகட்டங்களையும் இதில் எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத எங்களுடைய காலக்கட்டங்களையும் ஒன்றுதான் என கூறுவது மிகவும் தவறு. தகுதி தேர்விலே குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டு வேலை கேட்கவில்லை. அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு பரிக்கப்படுவதால் தான் எங்கள் உரிமைகளை கேட்கிறோம்.

No comments:

Post a Comment