தமிழ்நாடு
ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அரசு தேர்வுகள்மண்டலத் துணை இயக்குனரின்
செயலர் ஆசிர்வாதம் செய்திக்குறிப்பு:ஊரகப்
பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில்
எட்டாம் வகுப்பு தேர்தவில் 50 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்று
தேர்ச்சியடைந்து தற்போது வரும் கல்வியாண்டில் படித்துக் கொண்டிருப்பவராக
இருத்தல் வேண்டும்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர்,
பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு
வருவாய் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல்
வேண்டும்.தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான
கட்டணம் 5 ரூபாய் சேவைக் கட்டணம் 5 மொத்தமாக 10 விதம் ஆன் லைன் மூலம்
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி
தலைமை ஆசிரியர் மூலம் உரிய முதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்த
வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 22ம் தேதி ஆகும். ஒவ்வொரு
மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 @பருக்கு 50 ஆண்கள், 50 பெண்கள்
9ம் வகுப்பு 12ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்பு உதவித்தொகை
ஆண்டுதோறும் 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.நகராட்சி மற்றும் மாநகராட்சி
பகுதிகளில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன்
பள்ளிகளில் பயில்வோரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment