1. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்டஇடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவேசென்றுவிடுங்கள். அப்போதுதான் உங்களுக்கென ஒதுக்கப்பட்டஅறையையும், அலுவலர்களையும் விரைவில் கண்டுபிடிக்கலாம்.
2. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லும் முந்தைய நாளே, எல்லா அசல்சான்றிதழ்களையும், சான்றொப்பமிடப்பட்ட நகல்களையும் (2அல்லது 3 நகல்கள்) வரிசையாக அடுக்கி, குண்டூசி அல்லது 'ஜம்ப்'க்ளிப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
(அசல் சான்றுகள் தனியாக, நகல்கள் தனியாக)
உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3 அல்லது 4 வைத்துக்கொள்ளுங்கள்.
3. சான்றொப்பமிடாத நகல்களாக சரிபார்க்குமிடத்திற்கு கொண்டுபோய்விட்டீர்கள் என்றால், பதட்டப்படாதீர்கள்.
அங்கே இருக்கும் அதிகாரிகளுள் யாரிடமேனும் அசல்சான்றுகளைக் காட்டி பெற்றுவிடலாம்.
4. சான்றிதழ்களை சரிபார்க்கக் கொடுத்துவிட்டு, மீண்டும் அவற்றைவரிசையாக எடுத்து உள்ளே வைத்துக் கொண்டீர்களா என்பதைஉறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரு போதும் அலட்சியமாக கடைகளில்,ரயிலில்,பேருந்தில்,ஆட்டோவில்,சரிபார்க்குமிடத்தில் என எங்கும்மறந்து சான்றிதழ்களை வைத்துவிடாதீர்கள்.
5. ஏதேனும் சான்றிதழ்களை மறந்து வந்துவிட்டாலோ அல்லதுஇல்லையென்றாலோ அங்கிருக்கும் அலுவலர்களை பதட்டமின்றிஅதே சமயம் பணிந்து கேளுங்கள்.
அவர்கள் நிச்சயம் உங்களுக்கு வழிமுறைகளை சொல்வார்கள்.
6.திட்டமிட்டு முன் கூட்டியே செயல்படுங்கள். பதட்டத்தையும் கடைசிநேர பரபரப்பையும் தவிர்க்கலாம்.
- வெற்றி பெற்ற அனைத்து ஆசிரிய நண்பர்களையும் உளமாரவாழ்த்தி வரவேற்கிறேன்.
கல்வி, யோகா, முதலுதவி, மருத்துவம், தியானம்,TNPSC, செல்போன், கணிப்பொறி above d All details @ http://dictionary4life.blogspot.in
ReplyDelete