அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் "நியமிக்கப்படுவதில்லை" என்ற கருத்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
இந்தக் குறையை நீக்க ஒரு நீண்ட நெடிய பயணத்தை
அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தேர்வு
வாரிய எழுத்துத் தேர்வினை மாநில அளவில் நடத்த ஆரம்பித்து, ஆசிரியர்கள் பாட
வாரியாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பின்னர் வந்த அரசு அனைத்து
தொகுப்பூதிய ஆசிரியர்களையும், கால முறை ஊதியத்தை ஒழித்து பணி நிரந்தரம்
செய்தது.
அதன் பின்னர் பணி மூப்பின் மூலமாக வேலை வாய்ப்பகத்தின் வாயிலாக ஆசிரியர்கள் சிறிது காலம் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பிறகு மத்திய அரசின் உத்தரவு மற்றும்
கட்டாயக் கல்விச் சட்டப்படி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கட்டாயம் என
அறிவித்தது.அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார்
பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வின் வாயிலாகவே நியமனம்
செய்யப்பட்டு வருகின்றனர்.
தேர்வு முறை மிகக் கடுமையானது.வினாத்தாள்
கடினமாக இருக்கும் என்பதை தகுதித் தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர்
விழுக்காட்டினை வைத்தே சொல்லிவிடலாம்.
அரசுப் பள்ளிகளில் இப்போதிருக்கிற இளம்
ஆசிரியர் படை கணினி, ப்ரொஜக்டர், இணையமெல்லாம் பயன்படுத்தத் தெரிந்த படை.
எல்லா தகவல்களையும் தேடி வந்து மாணவர்கள் முன் கொட்டுகிறார்கள்.
மாணவர்களின் சூழலுக்குத் தக்கவாறு தனியார்
பள்ளியில் முன்பே பணியாற்றியிருந்தாலும், அரசுப் பள்ளிக்கு வந்தவுடன்
தங்களை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment