scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

July 03, 2014

கண்துடைப்பு கலந்தாய்வு: ஆசிரியர்கள் அதிர்ச்சி-தினகரன் செய்தி

தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வெறும் கண்துடைப்பு எனவும் கலந்தாய்வு என்ற பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் ஆசிரியர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி
தலைமைஆசிரியர்கள் மாறுதல், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் கடந்த 17ம் தேதி தொடங்கி சனி, ஞாயிறு கூட
விடுமுறையின்றி தொடர்ச்சியாக நடந்து கடந்த 29ம் தேதி அதிகாலை 4.30 மணியுடன் முடிந்துள்ளது.
இந்த கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னர் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல்கள் அந்தந்த மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் மூத்த தலைமைஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டன.
இது போல் பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித்தனி தேதிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் சென்னையில் ஏதேனும் ஒரு பள்ளியில் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
இதனை எளிமை படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கான அலைச்சலை தவிர்க்க வேண்டும் என்பதற்கான தமிழக அரசு கல்வித்துறை கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் முதல் கலந்தாய்வினை நடத்த தொடங்கியது. கடந்த ஆண்டு எவ்வித பிரச்சனையுமின்றி விரைவாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆண்டு கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியான சம்பவங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்த ஆண்டு கலந்தாய்வில் ஆரம்பம் முதலே பல்வேறு குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. காலை 9 மணிக்கு அறிவிக்கப்பட்ட கலந்தாய்வுகள் ஒரு நாள் கூட சரியான நேரத்தில் துவக்கப்படவில்லை. கடந்த 28ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இரவு 6.30 மணிக்கு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு முடிந்தது. அதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் எவ்வித வசதியுமின்றி இரவு பொழுதினை கழித்தனர். கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
அரசியல் மற்றும் அதிகார பலத்தினை கொண்டு அவர்களுக்கு தேவையான நபர்களுக்கு வழங்குவதற்காக கலந்தாய்விற்கு முன்னரே பாதிக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டன. சில சமயங்களில் கலந்தாய்வு நடு நடுவே எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டன. மீண்டும் கலந்தாய்வு தொடங்கும் போது ஆன்லைனில் ஏற்கனவே காட்டப்பட்ட காலி பணியிடங்கள் பட்டியலில் காணாமல் போயிருந்தது. சென்னையில் திடீரென நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்த போது 70 பணியிடங்கள் மறைப்புக்குள்ளாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போல் ஒவ்வொரு மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாககாலியாக இருந்தும் அவை கலந்தாய்வின் போது
திட்டமிட்டு இரட்டடிப்பு செய்யப்பட்டன. இதனால் கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். பெரும்பாலான ஆசிரியர்கள் கையறு நிலையில் காணப்பட்டனர். சோகம் தாங்காமல் பெண் ஆசிரியர்கள் பலர் மவுனமாக கண்ணீர் வடித்தனர். பணியிட மாறுதல் பதவி உயர்வு ஆகியவற்றை எளிமைபடுத்தி வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பெரும் இன்னலையும் ஏமாற்றத்தையுமே அளித்தது எனவும் கலந்தாய்வு என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இனியும் ஆசிரியர்கள் சமூகம் இது போல் ஏமாற்றப்படக்கூடாது. இதுபோன்ற முறைகேடான கலந்தாய்வினை ரத்து
செய்துவிட்டு பழைய முறையை கெர்ண்டுவர வேண்டுமென பெரும்பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாறுதல்களை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் ஏ கிரேடாக பாவிக்கப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு கூடுதல் விலை நிர்ணயியக்கப்பட்டதாகவும் இதர மாவட்டங்களில் அதற்கேற்ப விலையும் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment