புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.அடுத்த நியமனம்: நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment