டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் போடுவது
தொடர்பாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு
(டிஇடி தேர்வு) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு
நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஇடி தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் என்பதை எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு தளர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று கடந்த பிப்ரவரி மாதம் 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படிதேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு நடத்தியது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். மேற்கண்ட மதிப்பெண்கள் வழங்கும்போது ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே மதிப்பெண்களை பெறும்பட்சத்தில் அவர்களில் பிறந்த தேதி அடிப்படையில் மூத்தோருக்கு சீனியாரிட்டி வழங்கப்படும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment