அனைத்துப் பள்ளிகளிலும் ஜூன் 9 முதல் 13 வரை மழை நீர் சேகரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 9இல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, அந்தந்தப் பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுவட்டாரங்களில் நடத்தப்பட வேண்டும்.
சென்னையில் இந்த விழிப்புணர்வுப் பேரணியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைக்கிறார். மழை நீர் சேகரித்தலின் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பயன்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 10 இல் பள்ளி அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகளை ஜூன் 11இல் பள்ளி அளவில் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஜூன் 13-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்பட வேண்டும். கண்காட்சியில் ஓவியப் படைப்புகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment