பிளஸ்
2 சிறப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு உரிய நேரத்தில் விண்ணப்பிக்கத்
தவறியவர்கள் ஜூன் 4, 5 தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ்
விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இந்தத்
தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 4, 5 ஆம் தேதிகளில் தங்களைப் பதிவு செய்து
கொள்ளலாம். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின்
நகலைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் எனவும்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வுக் கட்டணம், பதிவுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment