அந்த வகையில், பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தைப் பிடித்த சுசாந்திக்கு 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் இடம் பிடித்த
அலமேலுவுக்கு 30 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பிடித்த துளசிராஜன், நித்யா
ஆகியோருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவர்களுடன்,
மாவட்டத்திற்கு மூன்று பேர் வீதம், 96 பேர் தேர்வு செய்யப்பட்டு,
அவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பெரும் குளறுபடி
பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவு, வரும் 23ல் வெளியாகிறது. அதில் முதல் மூன்று
இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, முறையே 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம்
ரூபாய் வழங்கப்பட உள்ளது. எனவே, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பின்,
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப்
பிடிக்கும் மாணவர் அனைவருக்கும் சேர்த்து, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா
பரிசையும், உயர்கல்வி செலவை அரசு ஏற்பதற்கான உத்தரவுகளையும் வழங்குவார்.
கடந்த
ஆண்டு, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை அதிக மாணவ, மாணவியர்
பிடித்தனர். இவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவை சரியாக திட்டமிடாததால்,
பெரும் குளறுபடியில் முடிந்தது. முதலில் முதல்வர் பரிசு வழங்குவார் என
அறிவித்துவிட்டு, பின் அமைச்சர் (அப்போது வைகை செல்வன்) வழங்குவார் என
அதிகாரிகள் அறிவித்தனர். அதேபோல், விழா தலைமைச் செயலகம் என திட்டமிட்டு,
பின் சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
இங்கு
நடந்த விழாவிற்கு, கடைசி வரை அப்போதைய அமைச்சர் வைகை செல்வன் வரவில்லை.
இதனால் கொதித்துப்போன பெற்றோர், பரிசை புறக்கணித்து வெளிநடப்பு செய்யும்
நிலை ஏற்பட்டது. பின் ஒருவழியாக சமாளித்து அதிகாரிகளே பரிசை வழங்கினர்.
இந்த குளறுபடியால், அனைத்து மாணவ, மாணவியரையும் இரண்டாவது முறையாக மீண்டும்
அழைத்து முதல்வரே பரிசை வழங்கினார்.
உஷார்
இதை
எல்லாம் கருத்தில் கொண்டு, இம்முறை அமைச்சரும், அதிகாரிகளும் உஷாராக
இருப்பதாகவும், குளறுபடியின்றி விழாவை நடத்த தீவிர ஏற்பாடு செய்வதாகவும்
கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக
பழனியப்பனும், பள்ளி கல்வித்துறை அமைச்சராக வீரமணியும் உள்ளனர்.
No comments:
Post a Comment