அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில்அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக் கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment