வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 17ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதிஇரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்ககால அவகாசம் அளிக்கப்பட்டது. தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் 2,342 காலி பணியிடங்களுக்கு 9.95 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்கு சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்தோர் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை:டி.என்.பி.எஸ்.சி. வருகிற 14ம் தேதி முற்பகல் வி.ஏ.ஓ. பதவிக்கான எழுத்து தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 9.95 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர் விவரம் டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளமானwww.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓஅலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment