scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 22, 2014

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கான உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.
இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை விவரம்:

நாள் பாடம்

பிளஸ் 2
ஜூன் 18 மொழி முதல் தாள்
ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 23 இயற்பியல், பொருளியல்
ஜூன் 24 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
ஜூன் 25 வணிகவியல், புவியியல், "ஹோம் சயின்ஸ்'
ஜூன் 26 வேதியியல், கணக்குப்பதிவியல்
ஜூன் 27 உயிரியல், வரலாறு, தாவரவியல்,
வணிகக் கணிதம்
ஜூன் 28 கம்ப்யூட்டர் சயின்ஸ்,
"பயோ-கெமிஸ்ட்ரி'
ஜூன் 30 தொழிற்பாட தேர்வுகள், அரசியல்
அறிவியல், புள்ளியியல்

பத்தாம் வகுப்பு
ஜூன் 23 மொழி முதல் தாள்
ஜூன் 24 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 25 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 26 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 27 கணிதம்
ஜூன் 28 அறிவியல்
ஜூன் 30 சமூக அறிவியல்

No comments:

Post a Comment