scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 11, 2014

விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ-மாணவியர் சேர்க்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் மாணவ-மாணவியருக்கான சேர்க்கை வரும் மே மாதம் 02.05.2014 முதல் 05.05.2014 முடிய நடைபெற உள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ-மாணவியர் மாவட்ட தலைநகரங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்ப படிவத்திற்கான கட்டணம் 10 ரூபாய். மேலும், விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 25.04.2014.
இவ்வாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment