scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 16, 2014

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, அலுவலர்கள் அமரும் இருக்கை, ஏஜன்டுகள் அமரும் இருக்கை, ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க வேண்டிய இடம் என அனைத்து நடவடிக்கைகளும், அவர்களுக்கு செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டன. கடைசி கட்ட பயிற்சியில், அவர்கள் பணியாற்றும் இடம் அறிவிக்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் தேர்தலில், 2,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் பணிக்காக, மாவட்ட அளவில், 10 ஆயிரத்து 176 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு, நஞ்சப்பா பள்ளியிலும், தெற்கு தொகுதியில் பணியாற்றுவோருக்கு, ஜெய்வாபாய் பள்ளியிலும் பயிற்சி நடந்தது. ஓட்டுச்சாவடிகளில், கட்சி ஏஜன்டுகளை அமர்த்துவது, நிலை அலுவலர்கள் 1, 2, 3 ஆகியோருக்கு அமைவிடம் ஏற்படுத்துவது, ஓட்டுப்பதிவு செய்ய, மறைப்புடன் கூடிய மேஜையில், "பேலட் யூனிட்' வைப்பது தொடர்பாக விளக்கப்பட்டது."கன்ட்ரோல் யூனிட்'டை கையாளும், நிலை அலுவலர்களுக்கு, "கன்ட்ரோல் யூனிட்'டை, "பேலட் யூனிட்'டுடன் இணைப்பது குறித்து விளக்கப்பட்டது. இரண்டு "பேலட் யூனிட்' பயன்படுத்துவதால், முதல் "பேலட் யூனிட்'டை "கன்ட்ரோல் யூனிட்'டுடன் இணைத்து விட்டு, அதன்பிறகு, இரண்டாவது "பேலட் யூனிட்'டை, முதல் "பேலட் யூனிட்'டுடன் இணைப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவுக்கு முன், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்தும் விளக்கப்பட்டது.ஒவ்வொரு அலுவலருக்கும், அவர்கள் பணியாற்ற வேண்டிய சட்டசபை தொகுதி தெரிவிக்கப்பட்டது. கடைசி பயிற்சி முகாமில், பணியாற்ற வேண்டிய ஓட்டுச் சாவடி விவரங்கள் தெரிவிக்கப்படும். அனைத்து நியமனங்களும், தேர்தல் கமிஷன் மூலம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நஞ்சப்பா பள்ளியில், தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைத்திருந்தனர். ஓட்டுச்சாவடிக்கு முன், வாக்காளர் பகுதி, வேட்பாளர் விவரங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டுவது, ஓட்டுச்சாவடிக்குள், ஓட்டுச்சாவடி அலுவலர், நிலை அலுவலர்கள் செய்ய வேண்டிய பணி குறித்த விளக்கத்துடன், இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பயிற்சிக்காக, "கன்ட்ரோல் யூனிட்' மற்றும் "பேலட் யூனிட்'டு களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பயிற்சி நடந்த பள்ளிகளில், மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் கோவிந்தராஜ் நேற்று பார்வையிட்டார்.
"பேலட் யூனிட்' அருகேவாக்காளர் உறுதிமொழிஓட்டுப்பதிவு செய்வது ரகசியமாக பாதுகாக்கப்படும். அதற்காக, ஓட்டுப்பதிவு யூனிட் வைத்திருக்கும் மேஜை, அட்டை மூலமாக மறைக்கப்பட்டிருக்கும். அந்த அட்டையின் உட்புறமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உறுதிமொழி படிவம் ஒட்ட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதில், "ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் களின் மாண்பையும் நிலை நிறுத்து வோம் என்றும், ஒவ்வொரு தேர்தல்களிலும், அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம்,' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
விரைவில் உண்மை தன்மை! : தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 10 சதவீதத்துக்கும் அதிகமாக, "ரிசர்வ்' மெஷின்கள், மண்டல அளவில் இருப்பில் வைக்கப்படும். விரைவில், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், மெஷின்களின் உண்மை தன்மை உறுதி செய்யப்படும். அதன்பின், "பேலட் சீட்' பொருத்தி, "சீல்' வைக்கப்பட்டு, தொகுதிகளில் உள்ள "ஸ்ட்ராங் ரூம்'களில் பாதுகாக்கப்படும். வரும் 23ம் தேதி காலை, ஒவ்வொரு ஒட்டுச்சாவடிக்கும் தேவையான பொருட்களுடன் அனுப்பி வைக்கப்படும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், அந்தந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச்சென்று, ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்,' என்றனர்.

No comments:

Post a Comment